நிறைவேற்று அதிகார முறை சில சந்தர்ப்பங்களில் இருந்தால் நாட்டுக்கு நல்லது : பல்டி அடிக்கும் ராஜித

0
32

நிறைவேற்று அதிகார முறை சில சந்தர்ப்பங்களில் இருந்தால் நாட்டுக்கு நல்லது என்று சுகாதார அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

தெல்தெனிய பிரதான வைத்திய சாலைக்கான புதிய கட்டமொன்றை அமைப்பதற்காக நேற்று ஒழுங்குச் செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் இங்கு வலியுறுத்தியதாவது,

நிறைவேற்று அதிகார

1997ஆம் ஆண்டு நிறைவேற்று ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்ட காலம் முதல் அதற்கெதிராக நான் குரலெழுப்பி வந்துள்ளேன். என்றாலும் சில நேரங்களில் நிறைவேற்று முறைமை இருக்க வேண்டும் எனத் தோனுகிறது.

அமைச்சரவையில் ஏதாவது, ஒரு யோசனை கொண்டுவரப்படும் போது பல்வேறு கருத்துகளை அந்த யோசனை மீது முன்வைக்கப்படுகின்றன. என்றாலும், குறித்த யோசனையின் நன்மை தீமை குறித்த ஜனாதிபதியும் அவரின் சட்டப்பிரிவு ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுகின்றது. அவ்வாறான தருணங்களில் நிறைவேற்று முறைமை அவசியம்.

அதனால், அவ்வாறான தருணங்களில் நிறைவேற்று முறைமை இருந்தால் நல்லது என எனக்கு தோனும்.
இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பல அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

அது முன்னாள் ஜனாதிபதியை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்காகும். அதனால் தான் சைட்டத்திற்கு எதிராகச் செயற்படுகின்றனர். நாங்கள் நீதிமன்ற தீர்மானத்தின் அடிப்படையிலேயே செயற்படுவோம். எவரின் செயற்பாடுகளுக்கு அஞ்சமாட்டோம் என்றும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com