நிர்ணய விலையை மீறினால் முற்றுகை

0
236

நிர்ணய விலைக்கு மேலதிகமாக தேங்காய், கருவாடு, பருப்பு முதலியவற்றை விற்பனை செய்வோரை முற்றுகையிடும் நடவடிக்கை சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நுகவர்வோர் அலுவல்கள் அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன், சனிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் வர்த்தகர்களுக்கு தகவல்களை தெரிந்துகொள்வதற்கும், ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

தேங்காய், கருவாடு, பருப்பு ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலையின் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டது.

இதற்கமைவாக, தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 75 ரூபாய், கருவாடு (கட்டா) ஒரு கிலோவுக்கான ஆகக்கூடிய சில்லறை விலை 1,000 ரூபாய், மைசூர் பருப்பு ஒரு கிலோகிராமுக்கான சில்லறை விலை 130 ரூபாய் ஆகும்.

Advertisement