நியூலிலாந்து அணியின் உலகக்கிண்ண நாயகன் எலியாட் ஓய்வை அறிவித்தார்

0
73

உலகக்கிண்ணக் கிரிக்கெட்டில் முதன்முறையாக நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற எலியாட் ஒய்வு பெற்றுள்ளார்.

 நியூசிலாந்து அணியின் சலகதுறை ஆட்டகாரர் கிராண்ட் எலியாட் கடந்த 2015ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஸ்டெயின் வீசிய கடைசி பந்திற்கு முந்தைய பந்தை சிக்சருக்கு விளாசி முதன்முறையாக நியூசிலாந்து அணியை இறுதிப் போட்டிக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த போட்டியில் எலியாட் 84 ஓட்டங்களை எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தாலும், எலியாட் 83 ஓட்டங்களைச் சேர்த்து ஆறுதல் அளித்தார்.

38 வயதாகும் எலியாட், கடைசியாக நியூசிலாந்து அணிக்காக கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ரி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் களம் இறங்கினார். அதன்பின் நியூசிலாந்து அணிக்காக அவர் விளையாடவில்லை.

இந்நிலையில், இன்று சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எலியாட் நியூசிலாந்து அணிக்காக 83 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இங்கிலாந்து கவுண்டி அணியான பர்மிங்காம் பியர்ஸ் அணியில் விளையாடுவதற்காக கோல்பாக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments