நாளை முதல் மீண்டும் கடும் மழை : வளிமண்டலவியல் திணைக்களம்

0
281

நாளை முதல் மழைக்காலநிலை அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலநிலை நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் மீண்டும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கு , சப்ரகமுவ தெற்கு மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி இடம்பெறக்கூடும்.

விசேடமாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளையில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஊடாக அடிக்கடி 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மழைபெய்யும் பொழுது இந்த காற்றின் வேகம் மேலும் அதிகரிக்ககூடும்.

இடிமின்னல் தொடர்பில் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டல திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை கடற்றொழில் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை 7.00 மணிக்கு விடுத்த காலநிலை அறிக்கையில் தென்மேற்கு பருவகாலநிலை நாட்டின் ஊடாகவும் நாட்டை சுற்றியும் உள்ள கடற்பிரதேசத்தில் வலுவடைந்து இதுப்பதனால் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்க கூடும் என்று தெரிவித்துள்ளது.

இந்த காலநிலை எதிர்வு கூறல் இன்று முதல் மூன்று நாட்களுக்காக விடுக்கப்பட்டுள்ளது என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து காலியூடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிரதேசத்தில் அடிக்கடிமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காற்று தென்மேற்கு திசையைநோக்கி வீசுவதுடன் அதன் வேகம் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தை கொண்டிருக்கும்.

நாட்டை சுற்றிலும் கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் 60 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடும் என்பதினால் இந்த கடற்பிரதேசத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் திணைக்களம் வெளியிட்டுள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com