நாளைமறுதினம் போராட்டம் ; அரசுக்கு எச்சரிக்கை மணியடித்தது வைத்தியர் சங்கம்

0
33

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை பொதுவுடமையாக்குமாறு கோரி நாளைமறுதினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ளது.

இன்று கொழும்பில் கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுக்க கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை பொதுவுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பல மாதங்களாக தொடச்சியாக வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

அண்மையில் அனைத்துப் பல்கலைகழக மாணவர்கள் சுகாதார அமைச்சை முற்றுகையிட முனைந்த போது பொலிஸார் இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து சைட்டம் விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு உரித்தான நெவில் பெர்ணாந்து வைத்தியசாலை அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், சைட்டத்தின் நிர்வாகத்தை விரிவாக்குவது தொடர்பில் அரசு கலந்துரையாடிய வருகிறது.

இந்நிலையிலேயே நாளைமறுதினம் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments