நாமல் ராஜபக்ஸ வாக்கு மூலம் வழங்க ஹம்பாந்தோட்டை காவல்நிலையத்தில் முன்னிலையானார்

0
20

நாமல் ராஜபக்ஸ வாக்கு மூலம் வழங்க ஹம்பாந்தோட்டை காவல்நிலையத்தில் முன்னிலையானார்.

நாமல் ராஜபக்ஸ

வாக்கு மூலம் வழங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று ஹம்பாந்தோட்டை காவல்நிலையத்தில் முன்னிலையானார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சி கடந்த வெள்ளிக்கிழமை ஹம்பாந்தோட்டையில் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் இடையே ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணையின் தொடர்ச்சியாகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்படிருந்தது.

முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி ஷானக ஆகியோருக்கு நாளைய தினம் காவல்நிலையத்தில் முன்னிலையாகுமாறு, காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.

எனினும் நாளைய தினம் வழக்கு நடவடிக்கையின் பொருட்டு கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டியுள்ளதால் இன்று ஹம்பாந்தோட்டை காவல்நிலையத்தில் நாமல் ராஜபக்ஸ முன்னிலையானார்.

அதன் போது இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகளின் கலந்து கொள்ளவுள்ளதால் எதிர்வரும் 25ஆம் திகதி, தமக்கு தினம் ஒன்றை வழங்குமாறு கோரியிருந்தார்.

அதன்படி, தமது கோரிக்கைக்கு காவல்துறை அனுமதி அளித்ததாக நாமல் ராஜபக்ஸ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com