நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமான நிறுவனம் ஒன்றின் முன்னாள் பணிப்பாளர் கைது

0
55
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என்று கூறப்படும் நிறுவனம் ஒன்றின் முன்னாள் பணிப்பாளர் படபொல ஆராச்சிகே ஓரநெல்லா இரேசா சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து நாடு திரும்பிய வேளையில் இன்று அதிகாலை விமான நிலையத்தில் வைத்து அவர் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமானதென கூறப்படும் கவர்ஸ் கூட்டுறவு சேவைகள் நிறுவனத்தின் ஊடாக 30 மில்லியன் ரூபாவை சட்டமுரணாக பரிமாற்றியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலையாகாமல், நாட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டிய நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அவருக்கு இன்டர்போல் ஊடாக பிடியாணை பிறப்பித்தது.
இந்த நிலையிலேயே இன்று அதிகாலை அவர் கைதாகியுள்ளார்.
Advertisement