நான்கு நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதிச் செய்ய அரசு தீர்மானம்

0
58

நான்கு நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதிச் செய்ய அரசு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலனறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


கடந்த மார்ச் மாதம் முதல் வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் தொடர்ச்சியாக நிலவிவரும் வறட்சியின் காரணமாக நெல் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி நிலங்கள் யாவும் வரண்ட நிலங்களாக மாறியுள்ளன.

அரசி தட்டுபாடு ஏற்பட்டமையாள் முன்னதாக கடந்த மார்ச் மாதம் பாக்கிஸ்தானில் இருந்து 1000 மெட்ரிக் டொன் அரிசியை அரசு இறக்குமதி செய்திருந்தது. மீண்டும் இம்மாத இறுதியில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளமையாலேயே நான்கு நாடுகளில் இருந்தது அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments