நான்காவது போட்டியில் படுதோல்வியை சந்தித்தது இலங்கை

0
94
நான்காவது போட்டியில் படுதோல்வியை சந்தித்தது இலங்கை. நான்காவது

இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (31) பகலிரவு ஆட்டமாக இந்தப் போட்டி இடம்பெற்றது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 375 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி 131 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டங்களாக பெற்றார்.

அத்துடன், ஆரம்ப துப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா 104 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

மேலும், மஹேந்திர சிங் டோனி 49   ஓட்டங்களையும், பாண்டி 50 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர்.

இதையடுத்து, 376 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 42.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 168 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 70 ஓட்டங்களை ஆகக் கூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் பும்ரா, பாண்டியா, யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

ஆட்ட நாயகனாக விராட் கோலி தெரிவானார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments