நான்காவது ஒருநாள் போட்டி: இலங்கை அணிக்கு லசித் மலிங்க தலைவர்

0
292

நான்காவது ஒருநாள் போட்டி: இலங்கை அணிக்கு லசித் மலிங்க தலைவர்.நான்காவது

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 4 ஆவது போட்டிக்கு இலங்கை அணியின் தலைவராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என ஸ்ரீ லங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது. இலங்கை ஒருநாள் அணியின் தலைவரான உபுல் தரங்கவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கட் பேரவையால் தடை விதிக்கப்பட்டது.நான்காவது

இரண்டாவது போட்டியில் பந்து வீசுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டது.இதையடுத்து, அடுத்த இரண்டு (3,4ஆம்) போட்டிகளுக்கு சாமர கபுகெதர அணித் தலைவராக நியமிக்கப்பட்டார்.எனினும், நேற்று முன்தினம் இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் அவர் உபாதைக்கு உள்ளானதால், 4 ஆவது போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது.நான்காவது
இந்த நிலையில், 4 ஆவது போட்டிக்கு லசித் மலிங்க அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு போட்டிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கட்டின் ஒருநாள் அணித் தலைவர் உபுல் தரங்க 5 ஆவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணிக்குத் தலைமைதாங்குவார்.

 

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com