நானுஒயா சிறுமி பலி ; 41 பேருக்கு விளக்கமறியல்

0
426
நுவரெலியா நானுஒயா பகுதியில் 15.06.2017 அன்று இடம்பெற்ற விபத்தின் பொழுது கடந்த அசாதாரண நிலைமையை ஏற்படுத்தியதாக கைதுசெய்யப்பட்ட 41 பேரை எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி ருவான் டி சில்வா நேற்று உத்தரவிட்டார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நுவரெலியா நானுஒயா பகுதியில் கடந்த 15.06.2017 அன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் லொரியில் மோதுண்டு சிறுமி ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமானார்.
இதனைத் தொடர்ந்து நானுஒயா நகரில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.இதன்போது பொது மக்கள் ஆத்திரமடைந்து குறித்த லொரியை தீ மூட்டினர்.இந்த விடயம் தொடர்பாக நானுஒயா பொலிஸார் 41 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு நேற்று   நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில்  எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.