நாட்டில் வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்படலாம்?

0
24

மருத்துவ பீடத்திற்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வது மற்றும் மருத்துவ கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களை வெளியேற்றுவது போன்ற விடயங்கள் 5 வருடத்திற்கு காலதாமதமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியல் மருத்துவபீட மாணவர்கள் முன்னெடுத்து வரும் விரிவுரை புறக்கணிப்பால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பீட கலாநிதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவபீட மாணவர்களுக்காக நடாத்தப்படும் பரீட்சைகளின் போது வரவு 80 வீதம் காணப்பட வேண்டும். எனினும் இந்த வருடத்தை எடுத்துக்கொண்டால் எந்தவொரு மாணவருக்கும் பரீட்சையில் தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே, மருத்துவ பீட மாணவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலைமையில் அடுத்த வருடம் மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை அனுப்ப முடியாமல் போகும் என்றும் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியினை மூடுமாறு மருத்துவபீட மாணவர்கள் இந்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் வகுப்புக்களை புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்படலாம்?

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments