நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் – சம்பந்தன்

0
23
நாட்டில் விவசாய உற்பத்தியை நாட்டில், விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசியமானது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கிரான்புல்சேனை அணைக்கட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவர், இந்த அணைக்கட்டின் மூலம்
பல நூற்றுக் கணக்கான ஏக்கர் விவசாயத்தை மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.
இதுபோன்று, நாட்டின் பல இடங்களில் ஜனாதிபதி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஆகியோரின் தலைமையில் விவசாய மறுசீரமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விவசாய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் புதிய திட்டங்கள் மேலும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
பிரதேச விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற வசதியை மேலும் முழுமையாகப் பயன்படுத்தி பொருளாதாரத்திலும் வாழ்விலும் முன்னேற்றம் காண வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.
Advertisement