நாடு தழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் இன்று பணிப்புறக்கணிப்பு : முடங்கியது வைத்திய சேவை

0
25

நாடு தழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் இன்று பணிப்புறக்கணிப்பு. சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்துமு இன்று திங்கட்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஈடுபட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று 22ஆம் திகதி திங்கடற்கிழமை நாடாதழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது. இன்று காலை 8 மணி முதல் நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் வெளிநோயாளர் பிரிவு முடங்கியுள்ளது. நோயாளர்கள் பெரும் ஏமாற்றத்துடனையேயே வீடு திரும்புகின்றனர்.

கடந்த புதன்கிழமை அனைத்துப் பல்கலைகழக மாணவர்கள் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் மீது கண்ணீர்பிரையோகம் மேற்கொள்ளப்பட்டமை பெரும் கண்டனத்துக்குறிய விடம் என்று எச்சரித்து வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னாக மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments