நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

0
33

நாடளாவிய ரீதியில்நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவிற்கு விடுத்துள்ள பணிப்புரைக்கமைவாக மூன்று நாட்களை கொண்டதாக இந்த திட்டம் இன்று முதல் நாளை (4) ,நாளை மறுதினம் சனிக்கிழமை (5) வரை நடைபெறவுள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். இதனால் சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்குமாறும் சுகாதார அமைச்சு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள், நிர்மாணப் பணிகள் இடம்பெறும் பகுதிகள் என்பன பரிசோதிக்கப்படவுள்ளன.

இதற்கமைவாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், காலி, மாத்தறை, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது.

சுகாதார அதிகாரிகள், முப்படை வீரர்கள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வேலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments