நாடளாவிய ரீதியில் இன்று பாடசாலைகளில் சிரமதானப்பணிகள்..

0
36

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் டெங்கு அற்ற சூழலாக மாற்றும் மூன்று நாட்களைக் கொண்ட சிரமதான திட்டம் இன்று (28) ஆரம்பமாகிறது.

அதன்படி அனைத்து பாடசாலைகளினதும் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் அனைவரும் இன்றைய தினம் கல்வி நடவடிக்கையில் இருந்து விலகி பாடசாலை சூழலை சுத்தம் செய்யும் சிரமதானப் பணிகளில் ஈடுபடுமாறு கல்வியமைச்சு கூறியுள்ளது.

நாடளாவிய இன்று

இதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரையும் இணைத்துக் கொள்ள உள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்றைய தினம் சீருடையில் சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சிரமாதான பணிகளில் ஈடுபட முடியுமான உடையில் சமூகமளிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com