நல்ல வாய்ப்பை நலுவ விட்ட நிவின்பாலி!

0
31

‘நேரம்’ படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் நிவின் பாலி. தற்போது மலையாளத்தில் பல ஹிட் படங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும் நிவின் பாலியை ‘ரிச்சி’ படத்தின் மூலமாக நேரடித் தமிழ்ப்படத்தில் நடிக்கவைத்திருக்கிறார் இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன்.

படம் குறித்து இயக்குனர் கெளதமிடம் அளித்துள்ள பேட்டியில், ‘நீண்ட நாள்களாகவே நானும் நிவினும் ஒரு படம் பண்ணலாம்னு பேசுவோம். ‘நேரம்’ ரிலீஸான நேரத்தில் ஒரு ஸ்க்ரிப்ட் நிவினிடம் சொன்னேன்.

அவருக்குப் பிடித்திருந்தது. ஆனால், அந்தப் படத்துக்கான தயாரிப்பாளர் கிடைக்காததால் அந்தக் கதையைப் பண்ண முடியவில்லை.

நிவின் பாலியிடம் சொல்வதற்கு முன்னால் இந்தப் படத்துக்கான ஐடியாவை அசோக் செல்வனிடம் சொன்னேன். அசோக் மூலமாக விஜய் சேதுபதியை மீட் பண்ணி கதை சொன்னேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது.

சில மாற்றங்கள் செய்து, விஜய் சேதுபதியை ஹீரோவாக நடிக்க வைக்க எண்ணியிருந்தபோது, சில காரணங்களால் விஜய் சேதுபதியால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. அதற்குப் பிறகுதான் நிவினிடம் கதை போனது என கூறுகிறார் கௌதம்.

ரிச்சி படத்தின் டீசறை பார்த்த பெரும்பாலானா விஜய் சேதுபதி ரசிகர்களின் மைன்ட் வாய்ஸ்  அட..! மிஸ் ஆகிடுச்சே..! என்று தான் இருக்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments