நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடை 

0
32

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடை. 

நம்பிக்கை வாக்கெடுப்பு

தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கான தடை தொடர்ந்தும் மறு உத்தரவு வரும் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தம்மை தகுதிநீக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தாக்கல் செய்திருந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது 18 பேர் தகுதி நீக்கம் தொடர்பான சபாநாயகரின் உத்தரவுக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

அத்துடன், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என ஏற்கெனவே விதித்திருந்த தடை, மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார்.

இதேவேளை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டபேரவை செயலர் பூபதி, ஆளுந்தரப்பு பிரதம கொறடா ராஜேந்திரன், ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments