நடிகர் விக்ரமின் அடுத்த படத்தின் இயக்குனர் யார்?

ஸ்கெட்ச், துருவநட்சத்திரம் போன்ற படங்களில் நடித்து வரும் விக்ரம் அடுத்து நடிக்கவிருப்பது ராம் இயக்கத்தில்.

நடிகர் விக்ரமின் அடுத்த
கற்றது தமிழ்’, `தங்க மீன்கள்’, `தரமணி போன்ற படங்களை இயக்கியவர் ராம். இவர், அடுத்ததாக மம்முட்டி , அஞ்சலி நடிப்பில், `பேரன்பு’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.இதைத் தொடர்ந்து, ராம் இயக்கவிருக்கும் அடுத்த படத்தைத் தயாரிக்கிறார், கலைப்புலி எஸ் தாணு.

நடிகர் விக்ரமின் அடுத்த

`காசி’, `பிதாமகன்’, `அந்நியன்’, `தெய்வத்திருமகள்’ போன்ற படங்களில் சவாலான கதாபாத்திரத்தில் நடித்தவர் விக்ரம்.

மாறுபட்ட கதைக்களங்களில் படம் இயக்கும் ராமும், விதவிதமான கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் விக்ரமும் இந்தப் படத்தில் இணைந்திருப்பதால், நிச்சயமாக இப்படம் விக்ரம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடியதாக அமையும்.

நடிகர் விக்ரமின் அடுத்த

பிரமாண்டமாய் படங்களை தயாரிக்கும் தாணுவின் v.creations இப்படத்தையும் தயாரிப்பது சிறப்பான விடயமாகும்.இந்த வித்தியாசமான கூட்டணியில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது.

நடிகர் விக்ரமின் அடுத்த

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments