நடமாடும் விபச்சார விடுதி நடத்தியவர் கைது

0
304

நடமாடும் விபச்சார விடுதி நடத்தியவர் கைது

நடமாடும் விபச்சார விடுதியொன்றை நாவலபிட்டிய பிரதேசத்தில் நடத்திய பெண்னொருவர், மேலும் மூவரையும் கம்பளை போலீசார் நேற்று முந்தினம் கைது செய்துள்ளனர்.

போலீசாருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே போலீசார் இவர்களை கைது செய்துள்ளனர். இப்பெண் தொலைபேசியூடாக வாடிக்கையாளர்களை வரவழைத்து தன்னிடம் உள்ள பெண்களை வைத்து நடமாடும் விபச்சாரத் தொழிலை நடத்தி வந்தார்.

இது தொடர்பில் 44 வயதுள்ள பெண்ணொருவரும் 23 மற்றும் 27 வயது மதிக்கத்தக்க இரு பெண்களுமே கைது செய்யப்பட்டவர்களாவர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை நாவலபிட்டிய போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com