த.மு.கூட்டணி முன்வைத்த கோரிக்கைகளுக்கு வெற்றி

0
20
த.மு.கூட்டணி முன்வைத்த கோரிக்கைகளுக்கு வெற்றி,

நுவரெலியாவில் பிரதேச சபைகளை அதிகரிக்க இணக்கம்.

 த.மு.கூட்டணி
mano ganesan
நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளை அதிகரிக்குமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியால் விடுக்கப்பட்டுவந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவித்தது.
 த.மு.கூ. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று  மாலை நடத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அதன் தலைவர் மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, உள்ளுராட்சி நிறுவனங்கள்  தோட்டபுற மக்களுக்கு அபிவிருத்தியை வழங்கவில்லை. நுவரெலியா மாவட்டத்தில் நீண்டகாலமாக பிரதேச சபைகள் அதிகரிக்கப்படாது உள்ளன.
15ஆயிரம் மக்களுக்கு ஒரு உள்ளுராட்சிசபை என்று காணப்படுகின்ற நிலையில் 4இலட்சம் மக்கள்தொகையை கொண்ட நுவரெலியாவில் 5 பிரதேச சபைகளே காணப்படுகின்றன.
இன்று காலை அமைச்சர் பைசர் முஸ்தப்பாவை சந்தித்து எமது கோரிக்கைகளை முன்வைத்தோம் அதனை சட்டமூலத்தில் உள்ளடக்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.  ஜனபதிபதி மற்றும் பிரதமரும் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளை அதிகரிக்குமாறு அமைச்சருக்கு அறிவித்துள்ளனர் என்றார்.