தோல்வியுடன் ஆரம்பமான டீ 20 தொடர் – இலங்கைக்கு தொடர் தோல்வி

0
461

தோல்வியுடன் ஆரம்பமான டி20 தொடர்

பாகிஸ்தான் அணியுடனான முதலாவது டி20 போட்டியிலும் இலங்கை அணி தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

பாகிஸ்தான் அணியுடனான 20க்கு 20 தொடரின் முதல் போட்டி ஆரம்பமான நிலையில் இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது.

அபுதாபியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை இலங்கை அணிக்கு வழங்கியது.

அதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் சதீர சமரவிக்ரமவும் சீக்குகே பிரசன்னாவும் தலா 23 ஓட்டங்களை அதி கூடிய ஓட்டங்களாக பெற்றனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி 23 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

அதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது.

தோல்வியுடன் ஆரம்பமான டி20 தொடர்

தோல்வியுடன் ஆரம்பமான டி20 தொடர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement