தொல்பொருட்களை சேதபடுத்தினால் அபராதம் ரூ.20 இலட்சம் ஆக அதிகரிக்க யோசனை

0
17

தொல் பொருட்களை சேதப்படுத்தும் நபர்களுக்கான அபராதத் தொகையை 20 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விடுத்துள்ளதாக தொல்பொருள் திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பீ.பி.மண்டாவல தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது, இந்தக் குற்றங்களுக்காக 50,000 ரூபாய் அபராதமே விதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொல் பொருட்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக 20 இலட்சம் ரூபாய் அபராதம் மற்றும் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்க, தமது திணைக்களத்திற்கு அமைச்சர் யோசனை வழங்கியுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement