தொடரும் குடியிருப்பு தீவிபத்துக்கள் – மூவர் பலி

0
29

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளின் தலைநகரான ஹொனோலுலு நகரத்தில் உள்ள மார்கோ போலோ அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று மதியம் தீவிபத்து ஏற்பட்டது. குடியிருப்பின் 26-வது மாடியிலிருந்து தொடங்கி 27-வது மாடியின் பல பகுதிகளுக்கு தீ வேகமாக பரவியது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் கடும் போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.

அதன் பின் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டபோது 26-வது மாடியிலிருந்து மூன்று உடல்கள் தீயில் கருகி இறந்திருப்பதை கண்டறிந்துள்ளனர்.

மேலும் இவ்விபத்தில் காயம் அடைந்த 17-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பரவிய புகையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹொனோலுலு  தீயணைப்பு படையின் கேப்டன் டேவிட் ஜென்கின்ஸ் தெரிவித்தார்.

தீயணைப்பு படை வீரர்கள் ஒவ்வொரு மாடியில் உள்ள வீட்டிற்கும் சென்று அங்குள்ள மக்களை மீட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருக்கும் பகுதியில் பிடித்த தீயால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments