தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இராஜினாமா ?

0
53

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் தேர்தலை நடாத்த முடியாது போனால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா செய்ய வேண்டும் எனவும், தேர்தலை நடாத்தி மக்களின் ஜனநாயக உரிமையைக் காக்கக் கூடிய முதுகெலும்புள்ள ஒரு தலைவருக்கு அப்பதவி ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடாத்தும் தீர்மானம் வராவிடின் தான் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்த கருத்துக் குறித்தும் அவ்வமைப்பு நினைவுபடுத்தியுள்ளது.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைப்பின் இணைப்பாளர் மனோஜ் கமகே இதனைக் கூறியுள்ளார்.

மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளமைக்காக தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடாத்துமாறு வேண்டி நீதிமன்றம் செல்லவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement