தேர்தலை கண்காணிக்க 7000 பேர்

0
14
யாழில்

உள்ளுராட்சிமன்ற தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் 7,000 பேரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெவ்ரல் அமைப்பின் தலைவர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய கண்காணிப்பாளர்களுடன் சர்வதேச கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டாலும், நிதி பற்றாக்குறை காரணமாக இம்முறை சர்வதேச கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படமாட்டார்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ள நிலையில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் பல உள்ளமையால், இத்தேர்தலை கண்காணிப்பதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்கள் அவசியமில்லை என்பது தான் எமது கருத்தாக இருக்கிறது.

அத்தோடு, சிறிய தேர்தலொன்றே தற்போது நடைபெறவுள்ளமையாலும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் தேவைப்படமாட்டார்கள் என, அவர் மேலும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement