தேர்தலுக்கு பின்னர் சிறை செல்ல தயாராக இருங்கள் – விமல் எச்சரிக்கை

0
170
விமல்

எதிர்வரும் 10 ஆம் திகதியின் பின்னர் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட அமைச்சர்களுக்கு சிறைச்சாலை காற்சட்டையை அணிவிப்பதற்கு தேவையான மக்கள் வரத்தை பெற்றுத் தருமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ராஜித சேனாரத்ன உள்ளிட்டவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் போடுவதாக கூறித் திரிகின்றனர். எதிர்வரும் 10 ஆம் திகதியின் பின்னர் அவர்களை சிறையில் போடுகின்ற நிமிடங்கள் ஆரம்பமாவதாக அவர்களுக்கு நாம் கூறுகின்றோம் எனவும் விமல் வீரவங்ச எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com