தேர்தலுக்காக சகல ஏற்பாடுகளும் நுவரெலியாவில் பூர்த்தி

0
5

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நுவரெலிய மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

நுவரெலியா மாவட்டத்தில் 306 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு இடம்பெறும் தேர்தலில் 56,2025 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

வாக்களிப்பு நிலையங்களில் 7479 பேர் கடமையாற்றவுள்ளதோடு, பாதுகாப்பு கடமைகளில் 1572 பொலிஸார் ஈடுப்படவுள்ளனர்.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரையில் 125 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com