தேரர்கள் நிதி திரட்ட இருப்பதாக பேரா­சி­ரியர் மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரர் தெரி­வித்தார்

0
30

தேரர்கள் நிதி திரட்ட இருப்பதாக பேரா­சி­ரியர் மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரர் தெரி­வித்தார்.

தேரர்கள்

லலித் வீர­துங்க மற்றும் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோருக்கு நீதிமன்றத்தினால் விதிக்­க­ப்பட்­டுள்ள நஷ்­ட­ஈடு மற்றும் தண்­டப்­பணம் ஆகியவற்றைச் செலுத்­து­வ­தற்குத் தேவை­யான நிதியைத் திரட்­டு­வ­தற்கு 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை வேலைத்­திட்டம் ஒன்றை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக பேரா­சி­ரியர் மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரர் தெரி­வித்தார்.

“சில்­துணி சிறைக் கைதி­களைப் பாது­காக்கும் நிதியம்” எனும் அமைப்­பினர் நேற்று கொழும்­பி­லுள்ள சம்­புத்­தத்வ ஜயந்­தியில் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்திப்பொன்றிலேயே இவ்வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறியதாவது,

ஜனா­தி­ப­தியின் செய­லாளர் ஜனா­தி­ப­தியின் தீர்­மா­னத்தை செயல்ப்­ப­டுத்­தி­ய­மைக்­காக தண்­டிக்­கப்­ப­டு­கிறார் என்றால், அது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அவர்­களை குறித்த நெருக்­க­டி­யி­லி­ருந்து பாது­காக்க வேண்­டிய கடமை எமக்­குள்­ளது எனத் தெரிவித்தார்.

தேரர்கள்

ஆகவே சிறைக் கைதி­களைப் பாது­காக்கும் நிதி­யத்தின் மூலமாக நிதி திரட்டி அவர்­களைப் பாது­காப்­ப­தற்கு நாம் முன்­வந்­துள்ளோம். ஆகவே 15 ஆம் திகதி காலை எட்டு மணிக்கு புறக்­கோட்­டை­யி­லுள்ள சம்­புத்­தா­லோக விகா­ரையில் நிதி திரட்டும் வேலைத்­திட்­டத்தை ஆரம்­பிக்­க­வுள்ளோம். ஆரம்ப நிகழ்வில் நாடு தழு­விய ரீதி­யி­லுள்ள சகல தேரர்­க­ளையும் கலந்­து­கொள்­ளு­மாறு அழைப்பு விடுக்­கிறோம்.

16 மற்றும் 17 ஆம் திக­தி­களில் நாடு தழு­விய ரீதியில் நிதி சேக­ரிப்­ப­தற்கும் ஏற்­பா­டொன்றை ­செய்­துள்ளோம். அவ்வாறு சேக­ரிக்­கப்­படும் நிதி­யினை எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பிலுள்ள சம்புத்தத்வ ஜயந்திக்கு கொண்டு வந்து சம்பந்தப்பட்டவர்களிடம் கையளிக்கவுள்ளதாகவும் பேரா­சி­ரியர் மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments