மீண்டும் அதிகரித்த தேநீர் விலை

0
35

தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை நேற்று முதல் அமுலுக்குவரும் வகையில் ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சீனியின் இறக்குமதி வரி பத்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமையை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. ஏனெனில் உலக வர்த்தக சந்தையில் சீனியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

அவ்வாறான நிலையில் சீனிக்கு புதிய வரிகளை விதித்துள்ளமையினால் சீனி உள்ளடங்கும் உணவுப் பொருட்களின் விலையிலும் தாக்கம் செலுத்தும்.

எனவே, புதிய விலை அதிகரிப்பின் பிரகாரம் 15 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த தேநீர் இருபது ரூபாவாகவும் முப்பத்தைந்து ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த பால் தேநீர் நாற்பது ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com