தேசிய அரசை முன்னெடுத்துச்செல்ல பங்காளிக் கட்சிகள் பூரண இணக்கம்

0
13
Want create site? Find Free WordPress Themes and plugins.

தேசிய அரசை அடுத்த பொதுத் தேர்தல்வரை முன்நோக்கிக் கொண்டுசெள்ள பங்காளிக் கட்சிகளிடையே நடைபெற்ற பேச்சுகள் இணக்கப்பாட்டில் முடிவடைந்துள்ளதாக ஐ.தே.க. அறிவித்துள்ளது.

அமைச்சரவை மாற்றம் மற்றும் ஏனைய சில விடயங்களால் தேசிய அரசின் இரண்டு பிரதானக் கட்சிகளான ஐ.தே.க. மற்றும் சு.கவுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் தேசிய அரசு வீழ்ச்சியடையும் என்று அண்மைய நாட்களாக நாட்டில் பல்வேறு கருத்துகள் வலுப்பெற்று வந்தன.

இந்நிலையில், அடுத்த பொதுத் தேர்தர்வரை தேசிய அரசை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல பேச்சுகள் நடைபெற்றுவந்தன. இந்தப் பேச்சுகளில் இரண்டு கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தேசிய அரசு வீழ்ந்துபோகும் என்று கூறுபவர்களுக்கு அது வெறும் கனவாக மாத்திரமே அமையும் என்றும் அடுத்த பொதுத் தேர்தல்வரை தேசிய அரசு இணக்கப்பாட்டுடன் செயற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments