தெற்காசியாவின் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம்

0
37

பூகோள வெப்பநிலை அதிகரித்து வருவாதால் சுகாதார ரீதியில் தெற்காசிய நாடுகளுக்கு பாரிய ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சிரிக்கை விடுத்துள்ளனர்.

புவி வெப்பமடைவதை தடுக்கும் வகையில் 2015ஆம் ஆண்டு பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு பல்வேறு நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், சில நாடுகள் இன்னமும் புவி வெப்பமடைவதை தடுப்பதற்கான எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை உலக சுகாதார ஸ்தாபம் சுட்டிக்காட்டியிருந்தது.

அத்துடன், குறித்த உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் பாரிஸ் உடன்படிக்கையை ரத்துச் செய்திருந்தார்.

பாரிஸ் உடன்படிக்கையில் கையொழுத்திட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெப்பத்தை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையில் சில முயற்சிகள் மேற்கொண்டிருந்தாலும் அவை பின்னர் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், உலக வாளிமண்டலவியல் ஆராய்ச்சியாளர்கள் தெற்காசிய நாடுகளின் வெப்பநிலை சடுதியாக அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளனர்.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளின் சாதாரண வெப்பநிலை 35 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்க கூடிய அபாயம் நிலை தோற்றியுள்ளதாகவும், இதனை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள குறித்த நாடுகள் காபனீர் ஒட்சைட் வளியில் கலக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று உலக வாளிமண்டலவியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சிரிக்கை விடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement