தெற்காசியாவின் விசாலமான சிறுநீரக மருத்துவமனை -பொலன்னறுவையில்

0
89

தெற்காசியாவின் விசாலமான சிறுநீரக மருத்துவமனை-பொலன்னறுவையில்

பொலன்னறுவையில்சர்வதேச ஒத்துழைப்பு, நட்புறவின் ஊடாக நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ள ஜனாதிபதி உறுதி

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கோரிக்கையின் பேரில் சீன அரசாங்கத்தின் நட்புறவின் அன்பளிப்பாக 12,000 மில்லியன் செலவில் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய சிறுநீரக மருத்துவமனைக்கு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் அடிக்கல் நாட்டப்பட்டது.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதியின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மருத்துவமனை தெற்காசியாவிலேயே விசாலமான சிறுநீரக மருத்துவமனையாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

பொலன்னறுவை தள மருத்துவமனையை அண்மித்த 28 ஆம் கட்டை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் இந்த தேசிய சிறுநீரக மருத்துவமனைக்கான நிதி சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொலன்னறுவையில்பொலன்னறுவையில்பொலன்னறுவையில்பொலன்னறுவையில் பொலன்னறுவையில் பொலன்னறுவையில் பொலன்னறுவையில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement