தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு இன்று விஜயம்

0
52

தென்கொரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் யுன் பியுன் சே இன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கு இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டுடன் 40 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றது. இதனை முன்னிட்டு இலங்கை அரசும் தென்கொரிய தூதரகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள  நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் இலங்கையுடனான உறவை மேலும் கட்டியெழுப்பும் நோக்கிலும் அமைச்சர் யுன் பியுன் சே இந்த விஜயத்தைமேற்கொள்கின்றார்.

யுன் பியுன் சே

தென்கொரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

31 ஆண்டுகளுக்குப் பின்னர் தென்கொரிய அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments