எல்லோரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் – துமிந்த திஸாநாயக்க

0
14

துமிந்த திஸாநாயக்க நாட்டில் யாப்பு சீர்திருத்தம் ஒன்றின் அவசியம் தொடர்பில் பேசுவது இது முதல் சந்தர்ப்பம் இல்லை, மஹிந்த, மைத்திரி ஆகிய இருவருமே இது தொடர்பில் பேசுயுள்ளனர் என துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

வட்டகொட – மடக்கும்புர பிரதேசத்தில் வெலிகல வாவி புனரமைக்கப்பட்டு  மீன் குஞ்சுகள் இடும் வைபவம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஆட்சியின் போது, இந்திய அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த போது 13 மற்றும் அல்லாமல் 13 பிளஸ் தொடர்பிலும் பேசினார்கள்.

அதேபோல் முன்னைய ஆட்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா பிரதிநிதிகளிடம் நாட்டில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக உறுதியளிக்கப்பட்டது.

ஐ.நா மனித உரிமை பேரவைக்கும் இதே எதிர்பார்ப்பை வழங்கினர். எனவே சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் அமைப்பு திருத்தம் ஒன்று தேவை என்பதே உண்மை.

அந்த அரசியல் யாப்பில் பெரும்பான்மையினரின் கருத்துக்களே உள்ளடக்கப்பட வேண்டும். எனவே சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட வேண்டும்.

ஆகவே இது தொடர்பில் தற்போது தெரிவிக்கப்படும் பல கருத்துக்களை நாம் கேட்டு வருகின்றோமே தவிர அவற்றை அங்கிகரீக்கவில்லை. இந்த நிலையில் சிலர் இது தொடர்பில் குழப்பமடைந்துள்ளனர்.

எனவே ஒவ்வொரு இனத்தாரும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் யாப்பை உருவாக்க கடும் பிரயத்தனம் எடுத்துள்ளனர்.

ஆகவே, புதிய அரசியல் யாப்பின் ஊடாக வெவ்வேறான குழுக்களாக பிரியாமல் ஒன்றிணைந்து சக்திமிக்க இலங்கையில் முன்னோக்கி பயணிக்கவே எதிர்பார்க்கின்றோம். ஆகவே இதனை குறுகிய சிந்தனையோடு பார்க்காமல் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement