துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்

0
19

       துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்

மித்தெனிய தலாவ பாடசாலை அருகில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர், தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு  துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இரண்டு குடும்பங்களுக்கு இடையில்  தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த கருத்து மோதலே துப்பாக்கிச்சூட்டுக்கு காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement