தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இணைந்து செயல்பட இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் திட்டம்

0
27

விரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இணைந்து செயல்பட இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முடிவு செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு பிரான்சிஸ்ஜக் டஸ்க் மற்றும் ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜுன் கிளாடி ஜங்கர் ஆகியோர் உத்தியோகப் பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அண்மையில் டெல்லி வந்திருந்தனர்.

அதன்போது அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினர்.

ஒன்லைன் மூலமாக தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள்சேர்ப்பதை தடுப்பது, ஆயுத விநியோகத்தை தடுத்து நிறுத்துவது ஆகியவற்றில் இந்தியாவுடன் இணைந்து செயல் படுவோம் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பேச்சுவார்த்தையின் போது உறுதி அளித்தனர்.
அதேவேளை, ரோஹிங்கியா அகதிகள் விவகாரம், வடகொரியா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் ஆராயப் பட்டதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement