திரைப்படங்கள் திரைக்கு வர தேவையில்லை

0
40

திரைப்படங்கள் திரைக்கு வர தேவையில்லை

sruthi hariharan

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நெருங்கி வா முத்தமிடாதே, நிபுணன், சோலோ ஆகிய திரைப்படங்களில் நடித்தவர்.

தற்போது ஸ்ருதி “ரா ரா ராஜசேகர்” எனும் திரைப்படத்தில் நடிப்பதுடன் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.

ஸ்ருதி தமிழில் தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொள்கிறாராம், அதேவேளை கன்னடம், மலையாள படங்களிலும் நடிக்கிறார்.

sruthi hariharan

இது தொடர்பாக ஸ்ருதி ஹரிஹரன் கருத்து தெரிவிக்கையில் வித்தியாசமான படங்கள் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்படுவது பற்றி அறிந்திருக்கிறேன்.

அப்படியொரு படமாக செல்வமணி செல்வராஜின் “நிலா” எனக்கு அமைந்தது. பல்வேறு திரைப்பட விழாக்களில் இது பங்கேற்றது. இப்படம் திரைக்கு வருவது பற்றி கேட்கிறார்கள். ஒருசில படங்களுக்கு குறிப்பிட்ட ரசிகர்கள் வட்டம்தான் உள்ளது. அதுபோன்ற ஒரு படமாகவே இதை கருதுகிறேன்.

sruthi hariharan

சில படங்கள் தியேட்டருக்கு வராமல் திரைப்பட விழாக்களில் மட்டுமே திரையிடப்படுவதுண்டு. அதனால்தான் “பெஸ்டிவல் பிலிம்” (திரைப்பட விழா) என்று அதை சொல்கிறார்கள். பெஸ்டிவல் பிலிம் எல்லாமே தியேட்டரில் ரிலீஸ் ஆக வேண்டும் என்று கட்டாயமில்லை. அதில் காக்கா முட்டை போன்ற ஒன்றிரண்டு படங்கள் விதிவிலக்காக ரிலீஸ் ஆகிறது. நிலா பெஸ்டிவெல் படம். அதற்கு குறிப்பிட்ட எல்லை மார்க்கெட்தான் இருக்கிறது. என குறிப்பிட்டுள்ளார் ஸ்ருதி ஹரிஹரன்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com