திருமலை – பட்டினமும்சூழலும் பிரதேசத்தில் காணிக்கச்சேரி

0
49

திருமலை-பட்டினமும்சூழலும் பிரதேச செயலகப்பிரிவில் வதியும் காணி ஆவணம் இல்லாத மக்களுக்கு காணி ஆவணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான காணிக்கச்சேரி நிகழ்வு பட்டினமும்சூழலும் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இன்று திங்கட்கிழமைநடைபெற்றது.

கிழக்கு மாகாண காணி ஆணையாளரால் கோரப்பட்டிருந்த விண்ணப்பத் திற்கு அமைவாக விண்ணப்பம் செய்திருந்தோர் இந்தஆரம்ப காணி விசாரணைக்கு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு உரிய,அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் இவர்களுக்கு,அடுத்தடுத்து நடத்தப்படும் விசாரணைகளின் பின்பு இவர்களிலிருந்துதகுதியானோர்,தெரிவு செய்யப்பட்டு காணி ஆவணம் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments