திருப்பியனுப்பப்பட்ட எண்ணெய் கப்பல் திருகோணமலைத் துறைமுகத்தில்

0
848

இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் (எல்.ஐ.ஓ.சி.) பொய்யான பிரச்சாரத்தின் ஊடாக நாட்டில் எண்ணெய் நெருக்கடியை ஏற்படுத்தி திருப்பியனுப்பப்பட்ட எண்ணெய்க் கப்பலிலுள்ள எண்ணெய்யை நாட்டில் இறக்குமதி செய்ய முயற்சித்து வருகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன பொது ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட கப்பல் திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும், அதனை மீண்டும் நாட்டுக்குள் இறக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அச்சங்கம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரியுள்ள எண்ணெய்க் கப்பல் தாமதமாவதற்குரிய காரணத்தைக் கண்டறிந்து அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அச்சங்கத்தின் செயலாளர் டீ.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com