திணறியது இங்கிலாந்து : 211 ஓட்டங்களுக்கு சுருண்டது

0
18
Want create site? Find Free WordPress Themes and plugins.

ஐ.சி.சி. சம்பியன்ஸ் லீக் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பாக்கிஸ்தானுக்கு கடுமையான ஓட்ட இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களுக்குள் சுருண்டமை இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் சம்பியன் லீக் போட்டிகளில் இன்றை தினம் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கார்டிப் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே பாக். அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமலேயே ஆடி வந்தது.

சீரான இடைவேளையில் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை பாக். அணியின் பந்துவீச்சாளர்கள் பதம் பார்த்ததால் இங்கிலாந்து அணியால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

துடுப்பாட்டில் பெஸ்ட்ரே 43 ஓட்டங்களையும், ரூட் 46 மோர்கன் 33, பட்லர் 34 என்ற அடிப்படையில் ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில், அசன் அலி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பாக்கிஸ்தானுக்கு இலகுவான ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், மைதானத்தை பொருத்தமட்டில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக காணப்படுவதால் வெற்றி எவருக்கு என்பதை 25 ஓவர்கள் வரை கூற முடியாது என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இங்கிலாந்து அணி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments