ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து தாம் இன்னும் விலகவில்லை – சஜின் த வாஸ்

0
37
ஸ்ரீ லங்காதாம் இன்னும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக காவற்துறை நிதி மோசடி தவிர்ப்பு பிரிவில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க காலப்பகுதியில் மிஹின் லங்கா நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் இரண்டு பேரூந்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில்  முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைவாகவே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதன்போது அவரிடம் சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக காவற்துறை நிதி மோசடி தவிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
Advertisement