தாதியர் மலசலகூடத்தில் கெமரா வைத்த வைத்தியரின் பரிதாப நிலை!

0
2287

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தாதியர் மலசலகூடத்தில் கமெராவைப் பொருத்தியதாகக் கூறப்படும் வைத்தியருக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அநுராதபுரம் பொலிஸாரால், ​அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபரான வைத்தியருக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்வதற்கு போதியளவான காரணங்கள் இருப்பதனால், வைத்தியருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர், எழுத்துமூலமாக அறிவித்துள்ளார். இதனையடுத்தே, வழக்குத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட, வைத்தியரை, எதிர்வரும் 15ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும், அநுராதபுரம் பிரதான நீதிமன்ற நீதவான், நேற்று (08) உத்தரவிட்டார்.

கமெராவில் பதியப்பட்ட காட்சிகள், சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவை தொடர்பிலான அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவர், அநுராதபுரம் வைத்தியசாலையில், கணக்குப்பிரிவில் கடமையாற்றும் பெண்கள் செல்கின்ற மலசலகூடத்துக்குள் சி.சி.டி.வி கமெராவைப் பொருத்தி, அக்கமெராவை தன்னுடைய அறையிலிருந்து இயக்கி, நேரலையாகப் பார்த்துக்கொண்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments