தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றேன் – மஹிந்த

0
35

இலங்கை பல்கலைக்கழக போராட்ட வரலாற்றில் அரசாங்கம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மருத்துவ கல்வியின் எதிர்காலத்தை குணப்படுத்துவதற்கு மாணவர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் மருத்துவர்களுடன் உடனடியாக கலந்துரையாடல் மேசையில் அமருமாறு ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசாங்க தரப்பினருக்கு தாம் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இது தொடர்பில் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பல்கலைக்கழக போராட்ட வரலாற்றில் மிலேச்சத்தனமாக தாக்குதல் நேற்று மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் இலங்கை வரலாற்றில் அழியாத வடுவாக திகழும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments