தவான் அதிரடி: முதல் போட்டியில் இலங்கையை பந்தாடியது இந்தியா

0
61
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முமலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 9 விக்கட்டுக்கiளால் வெற்றி பெற்றது.
தம்புள்ளை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 43.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 216 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
தவான் அதிரடி
இலங்கை அணி சார்பில், நிரோஷன் திக்வெல்ல ஆகக்கூடிய ஓட்டங்களாக 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
பந்துவீச்சில், இந்திய அணியின் அக்ஷர் பட்டேல் 3 விக்கட்டுக்களையும், ஜாதவ், புரும்ரா, சஹால் ஆகியோர் தலா இரு விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 217 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 28.5 ஓவர்களில் ஒரு விக்கட்டை மாத்திரமே இழந்து 220 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
இந்திய அணி சார்பில் ஷpகர் தவான் 90 பந்துகளில் 20 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்களாக 132 ஓட்டங்களையும், அணித் தலைவர் விராட் கோலி 10 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்களாக 82 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றனர்.
ஆட்டநாயகனாக ஷpகர் தவான தெரிவானார்.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ளது.