சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை சபையில் கிழித்தெறிந்த தவநாதன்

0
72

வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முன்மொழிந்த பிரேரணையை சபையில் வைத்தே வடமாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர் தவநாதன் இன்று கிழித்தெறிந்தள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தகோரி கடந்த 86 ஆம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்திருந்தார்.

எனினும் இந்த விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிக் கூட்டத்தில் பேசியதன் பின்னர் 14 ஆம் திகதி விசேட அமர்வை நடத்தி ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

தவநாதன்

இதன்படி இன்றைய தினம் விசேட அமர்வு நடை பெற்றுவருகின்றது. இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது பிரேரணையை சபையில் முன்மொழிந்தார்.

இதன்போது ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை எதிர்த்ததுடன் சிவாஜிலிங்கம் 86 ஆம் அமர்வில் முன்மொழிந்த பிரேரணை வேறு இன்றைய தினம் முன்மொழியும் பிரேரணை வேறு எனக் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில்,  சிவாஜிலிங்கம் பிரேரணையை மாற்றியமை தவறானது என க் குற்றஞ்சாட்டிய எதிர்கட்சி உறுப்பினர் தவநாதன் சிவாஜிலிங்கம் சபையை அவமதித்துள்ளதாக கூறி சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை சபையில் வைத்தே கிழித்து எறிந்தார்.

Comments

comments