தளபதி நடிகரின் படத்தை ஹிட்டாக்க தில்லாலங்கடி வேலை பார்த்த வாரிசு நடிகையின் தந்தை!

0
65

தளபதி நடிகரின் படத்தை ஹிட்டாக்க தில்லாலங்கடி வேலை பார்த்த வாரிசு நடிகையின் தந்தை!

தனது மகள் தளபதி நடிகருடன் சேர்ந்து நடித்துள்ள படத்தை வெற்றிபெறவைக்க  நடிகையின் தந்தை சேட்டன்கள் மாநிலத்தில் சில வேலைகளை செய்துள்ளதாக பேசப்படுகிறது.

சேட்டன்கள் மாநிலத்தில் தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்கள்- விநியோகஸ்தர்களுக்கும் இடையில்  பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் 10ஆம் திகதி  முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து ஏ கிளாஸ் தியேட்டர்களில் மலையாள படங்கள் திரையிடுவதை நிறுத்துகிறார்கள்.

பொங்கல் அன்று அந்த தியேட்டர்களில் தளபதி நடிகரின் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இடையேயான பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தையில் தளபதியின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகையின் தயாரிப்பாளர் தந்தை தான் முக்கிய பங்கு வகிக்கிறாராம்.

தனது மகளின் படத்தை ஹிட்டாக்கவே அவர் வேண்டும் என்றே மலையாள படங்கள் ரிலீஸாவதை தடுக்கிறார் என்று மல்லுவுட்டில் ஆளாளுக்கு பேசுகிறார்கள்.

சேட்டன்கள் மாநிலத்தில் தளபதிக்கு ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments