தமிழ் கைதிகளின் வழக்கு விசாரணைகள் வவுனியாவிற்கு மாற்றம்

0
50
சரண குணவர்தன

அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மீளவும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யக்கோரிய குறித்த மூன்று பேரின் வழக்குகளும் சாட்சியங்களின் பாதுகாப்பின் நிமித்தம் அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்புத் தெரிவித்து குறித்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com