தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பி வைப்பு – ஆனந்தசங்கரி

0
16

”இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும். அவ்வாறு இல்லாவிட்டால் விரும்பத்தகாத ஒரு சில விடயங்களை நாடு சந்திக்க நேரிடும்” என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது-ஆனந்தசங்கரி

”சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விடயத்தில் தாங்கள் அதிக கவனம் எடுத்து நிலைமையை சீராக்குமாறு வேண்டுகின்றேன்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் காணப்படும் சில விடயங்கள் இங்கு ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் சமாதானத்தையும் சகவாழ்வையும் திரும்பச்செய்ய, கடந்த 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 2.1.1. சரத்தில் ”பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் வேறு அவசரகால சட்டங்கள் ஆகியவற்றின் கீழ் போராளிகளுக்கும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும், வழக்கு தொடரப்பட்டவர்களுக்கும் அல்லது இச்சட்டங்களின் கீழ் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களுக்கும் இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவார். இலங்கை அரசு இளம் போராளிகளுக்கு, தேசிய வாழ்விற்கு திரும்பக் கூடிய வகையில் புனர்வாழ்வு அளிக்க விசேட கவனம் செலுத்தும். இதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக தாங்கள் உடன் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு பொது மன்னிப்போ அல்லது நிபந்தனையுடன் கூடிய விடுதலையையோ அளித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்படி தங்களை கேட்டுக்கொள்கின்றேன்” என ஆனந்தசங்கரி தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments