தமிழில் வெளியாகும் ஹிரித்திக் ரோஷன் படம்!

0
65

தமிழில் வெளியாகும் ஹிரித்திக் ரோஷன் படம்!

ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் யாமி கௌதம் நடிப்பில் உருவாகியிருக்கும்  ஹிந்தி  படமான ‘காபில்’ இம்மாதம் 25ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தினை தமிழில் மொழிமாற்றம் செய்து B4U எண்டர்டெயின்மெண்ட் ‘பலம்’ என்ற தலைப்பில் வெளியிடுகிறது. B4U எண்டர்டெயின்மெண்ட் கோட்ஸ் ஒப் ஈஜிப்ட், பேட்மேன் vs சூப்பர்மேன், மேகானிக்  உள்ளிட்ட பல பிரபல ஆங்கிலப்படங்களையும், பாகி, அசார், உத்டா பஞ்சாப், ரஸ்டம் உள்ளிட்ட பல பிரபல ஹிந்தி படங்களையும் விநியோகம் செய்ததென்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதை பற்றி படக்குழு சார்பில் “31 வயதான பிண்ணனி குரல் கலைஞனான ரோஹன் தனது பெரும்பான்மையான வாழ்கையை ஸ்டுடியோக்களிலும், இரவை தனது இல்லத்திலும் கழிக்கிறான். பிறப்பிலேயே பார்வையற்றவனான ரோஹனுக்கு அனைவரும் வாழும் ஒரு சாதரணமான வாழ்க்கையை மேற்கொள்வதே அவன் வாழ்வின் கனவாக இருக்கிறது. ஒரு தருணத்தில் சுப்ரியாவை சந்திக்க நேரும் அவன் அவள் மீது காதல் வயப்படுகிறான்.

ரோஹனின் நேர்மையும், தன்னம்பிக்கையும் அவளை கவர்கிறது. ஒருவர் மீது ஒருவர் பேரன்பை வைத்திருக்கும் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்திருந்தால் வாழ்வில் எதுவும் சாத்தியமே என்ற நிலையில் எதிர்பாராத விதமாக ரோஹன், சுப்ரியாவை பிரிய நேரிடுகிறது.

சுப்ரியாவின் பிரிவு ரோஹனின் வாழ்க்கையை இருளில் தள்ளி தனிமை படுத்துகிறது. சுப்ரியா பிரிவின் காரணத்தை ஆராய முற்ப்படும் ரோஹனுக்கு, தன்னை சுப்ரியா பிரிந்ததற்கான உண்மை புலப்படுகிறது.

தன்னை தனிமை படுத்தியவர்களுக்கெதிரான யுத்தத்தில் ஈடுபடுகிறான் ரோஹன். ரோஹன் இலட்சியத்தை அடைவதை எந்த ஒரு சக்தியும் தடுக்க போவதில்லை” என்று  கூறப்பட்டுள்ளது.

Comments

comments